எல்லாரும் அவர்வர் இருக்கையில் அமர்ந்தனர்…வீட்டின் இளைய தலைமுறைகள் வயதில் மூத்தவர்களுக்கு ஓரத்தில் இடமளித்து, அப்போது தான் அவர்கள் எழுந்து போவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து நடுவில் அமர்ந்தனர்.
ஶ்ரீயின் அருகில் ஒரு பக்கம் கீதாவும், இன்னொரு பக்கம் ரிஷியும் அமர்ந்தனர்.நான் கிருஷ் அத்தான் பக்கத்தில் தான் உட்காருவேன் என்று மீரா அவன் அருகிலே உட்கார்ந்தாள்.ரிஷிக்கும் கிருஷூக்கும் நடுவில் மீரா அமர்ந்து இருந்தாள்.
இந்த மீரா அக்காவுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை என்று வாணிக்கு எரிச்சலாக வந்தது.வாணி மனதிற்குள் நன்றாக புலம்பித்தீர்த்தாள்.அதையும் விட இந்த ரிஷி அவள் அருகில் இருந்து ஏழாமல் இருப்பது தான் இன்னும் எரிச்சலாக வந்தது.அதுவும் ரிஷி மீராவிடமும் ஶ்ரீயிடமும் பேசி கொண்டு இருப்பதைப் பார்த்து வாணியின் இரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகியது.
“எருமை மாடு…கொஞ்சம் கூட அறிவேயில்லை இதுக்கு…இரண்டு பொண்ணுங்களுக்கு இடையில் உட்கார்ந்துட்டு ஈஈஈனு பல்லை இளிச்சிட்டு இருக்கு” என்று வாணி ரிஷியை மனதிற்குள் நன்றாக வைதாள்.
கீதா வாணியின் முகம் கோபத்தில் சிவந்து இருப்பதைப் பார்த்து ஐய்யையோ தெரியாத் தானமாக இவள் பக்கத்தில் உட்கார்ந்திட்டோம் போலவே…நேற்று சொன்னதுக்கு இன்றைக்கு…இப்போ கோபமாக இருக்களோ…நான் ஒண்ணுமே பண்ணவில்லைம்மா…சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்…நான் ரொம்ப அப்பாவி…என்னை விட்டுவிடும்மா…!நான் இப்போ என்ன பண்ணி இவளிடம் இருந்து தப்பிக்கிறது… என்று திருதிருவென முழித்தாள்.
அப்போது கீதாவின் பக்கம் எதர்ச்சையாக திரும்பிய ஶ்ரீ இவள் திருதிருவென விழித்து கொண்டு இருப்பதைப் பார்த்து…கீதாவின் கையைத் தொட்டு கீது என்று அழைத்தாள்.
அவள் கனவில் இருந்து விழிப்பவள் போல் விழித்து ஶ்ரீயை வேற்றுகிரக வாசியைப் போல் பார்த்துக்கொண்டே எல்லாம் உன்னால் வருது…நான் இந்நேரம் ஊருக்கு போய் இருப்பேன்…என்னை இங்கே இருக்க சொல்லி பாசமாக பேசி கூட்டிட்டு வந்து வயசுல சின்னப்பிள்ளைகளிடம் எல்லாம் என்னை பயப்பட வைச்சுட்டு இருக்காள்…பாவி…என்று அவளை மனதில் கரித்துகொட்டி கொண்டு இருந்தாள்.
ஶ்ரீ அவளைப் பயத்துடன் பார்த்து “என்னாச்சுடி கீது…ஏன் ஒரு மாதிரி இருக்கே…?உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று அவள் கழுத்தைத் தொட்டு பார்த்தாள்.
அவள் கேட்டதும்தான் தாமதம் அவள் கையைத் தட்டிவிட்டு “நொன்னாச்சுடி” என்றவாறு மடமடவென அவளை மனதில் திட்டியதை நேரடியாக அவளிடம் கொட்டினாள்.
அதன்பிறகு தான் ஶ்ரீ வாணியைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தாள்…வாணியின் பார்வை மீராவுடன் பேசிக்கொண்டியிருக்கும் ரிஷியை உறுத்து விழித்துகொண்டு இருந்தது…ஓ…இதுதான் சங்கதியா…என்று யோசித்துவிட்டு கீதாவிடம் அன்று வாணியின் செல்லில் பார்த்த விசயத்தைப் பற்றி கூறிவிட்டு கடைசியாக “அவள் இப்போ உன்னை முறைக்கலைடி…ரிஷியைத் தான் முறைக்கிறாள்… நன்றாக திரும்பி பாரு” என்றாள்.
கீதா திரும்பி பார்த்துவிட்டு வாயெல்லாம் பல்லாக “ஆமாண்டி…!நீ சொன்ன மாதிரி…ரிஷியைத் தான் முறைக்கிறாள்…என்னை இல்லை…அப்பா…!!இப்போ தான் எனக்கு நிம்மதி” என்று தனது நெஞ்சைத் தடவிகொண்டே பின்னால் பார்த்தவள் அதிர்ந்தாள்.
ஏனெனில் இரண்டு சீட் பின்னால் ரமேஷ் அங்கு இருந்தவாறு ஶ்ரீநிதியையேப் பார்த்துக்கொண்டு இருந்தான்…கீதாவுக்கு தான் இதயம் வேக வேகமாக பயத்தில் துடித்தது…ஐய்யையோ இவன் எதுக்கு இங்கே வந்தான்…இவங்க குடும்பத்தில் யாரவது பார்த்தால்…பாவம் ஶ்ரீ…மாட்டிகொள்வாளே…என்று ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்குமோ என்று பயத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
நடுவில் ஶ்ரீ உன்னை அப்புறம் பார்த்துகிறேன் லூசு என்று சொன்னதை அவள் அறியவே இல்லை.அந்த அளவு அதிர்ச்சியுடன் இருந்தாள்.
அதற்குள் படம் ஆரம்பித்துவிட்டதால் விளக்கை அணைத்தனர்… அதன்பிறகு தான் ஆசுவாசப் பெருமூச்சுவிட்டாள்…இதைத் தனது தோழியிடம் சொல்லலமா…?வேண்டாமா…?? என்று யோசித்து வேணாம் பாவம் அவளிடம் எதுக்கு இதனை சொல்லி கலவரப்படுத்தணும் என்று விட்டுவிட்டாள்.
அவளைக் காப்பாற்ற நினைத்துதான் கீதா அவ்வாறு செய்தாள்…ஆனால் இதனால் தனது தோழியின் வாழ்க்கையில் பெரிய பூகம்பம் நிகழப் போவதை பாவம் அந்த தோழி அறியாள்.
படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அங்கு மீரா கிருஷின் மீது முழுவதுமாக சாய்ந்திருந்தாள்…இதனால் கிருஷிற்கு எரிச்சலாக வந்தது…வேறு வழியில்லாமல் நீண்ட நேரம் பல்லைக் கடித்து பொறுமையாக இருந்தான்…அவள் அவனைத் தொட்டு தடவவும் அவன் கோபம் எல்லைமீறியது…
“மீரா ஒழுங்காக உன் சீட்டில் உட்காரு…!” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.
அவன் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து அவள் சீட்டில் ஒழுங்காக உட்கார்ந்திருந்தாள்…ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு மறுபடியும் அவன் மேல் சாயவும்…கிருஷ் கட்டுகடங்காத கோபத்துடன் “ஏய் இப்போ ஒழுங்கா எழுந்து உட்காரப் போறியா…?இல்லையா…??உனக்கு முதுகெலும்பெல்லாம் நன்றாக தானே இருக்கு…அப்புறம் எதுக்கு என் மேல் சாய்கிறாய்…இன்னொருவாட்டி சாய்ந்தே…அவ்வளவு தான் நீ…??” என்று அடிக்குரலில் சீறினான்.
அவன் மெதுவாக தான் பேசினான்…ஆனால் மீராவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரிஷிக்கும் ஶ்ரீக்கும் கேட்டு மீராவைத் திரும்பி பார்த்தனர்…அதில் அவமானமாக உணர்ந்து ஒழுங்காக எழுந்து அமர்ந்தாள்.
படம் இடைவேளைவிட்ட உடனே மறுபடியும் பயத்துடன் கீதா திரும்பிப் பின்னால் பார்த்தாள்…அந்த இடத்தில் அவன் இல்லை என்பதை தெரிந்தப்பிறகு தான் மனம் நிம்மதியடைந்தது…இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும்போது உள்ளே செல்ல இருந்த ரிஷியின் கையைப் பிடித்து தன் அருகில் உட்காருமாறு பணித்தாள் வாணி…அவனும் வேறு வழியில்லாமல் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.
மீரா தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அங்கு உட்காரப் பிடிக்காமல் தனது அப்பாயி குந்தவைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.ஶ்ரீ தனது தோழியிடம் மும்முரமாக பேசிக்கொண்டு இருந்ததினால் இது எதையும் அவள் அறியவில்லை.
படம் தொடங்கியவுடன் ஶ்ரீ தனது கவனத்தைப் படத்தில் செலுத்தினாள்.
அதில் ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு தனது கருத்துக்களை ரிஷியிடம் பகிர்ந்து கொள்வதற்காக அவனின் புறம் சாய்ந்து தோளோடு தோள் உரச “ரிஷி அந்த பொண்ணு வாழ்க்கையில் எந்த தப்பும் பண்ணாமல் அவளுக்கு வந்த நோயினால் தனது பெற்றோர்களால் ஒதுக்கப்பட்டு… சுற்றுப்புறத்தினால் ஒரு பெண்ணாகிய அவளுக்கு நடக்கும் அநிதீயை எவ்வளவு அழகாக சொல்லிருக்காங்கடா…??இந்த பொண்ணு ரொம்ப தைரியமான பெண்ணாக இருக்கு இல்லைடா…??” என்று தன்போக்கில் கூறிவிட்டு அவனை உரசியவாறே உட்கார்ந்துகொண்டு படத்தை கவனித்தாள்.
கீதா தான்…ரிஷி வாணி பக்கத்தில் உட்கார்ந்து இருக்காரு…அப்போ இவள் யாரிடம் பேசுகிறாள் என்று யோசித்து எட்டிப்பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள்.
ஏனெனில் அவள் அருகில் உட்கார்ந்து இருந்தது கிருஷ்… அதுமட்டுமில்லாமல் ஶ்ரீ சொன்னதை வைத்து நியாயப்படி பார்த்தால் தன் மேல் சாய்ந்தற்காக மீராவைத் திட்டியதைப் போல் ஶ்ரீயைத் திட்டி இருக்க வேண்டும்…ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்காரு என்று யோசித்துவிட்டு அவனை மறுபடியும் பார்த்தவள் இன்னும் அதிர்ந்தாள்.
ஏனெனில் கிருஷின் பார்வை முழுவதும் ஶ்ரீயிடமே இருந்தது…அந்த இருட்டிலும் அவன் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது…இது காதலுக்கான பார்வை என்பதை கீதா உணர்ந்தாள்…உணர்ந்தவள் இன்னும் குழம்பினாள்.
கீதா தன் குழப்பத்தை விடுத்து ஶ்ரீயிடம் இதைப் பற்றி சொல்லலாம் என்று அவள் கையைப் பிடிக்கப்போக ஶ்ரீ மறுபடியும் தனது கருத்தைத் தெரிவிக்க ரிஷி என்று நினைத்து கிருஷிடம் இன்னும் ஒட்டி “ஒரு நோயாளியை எல்லாரும் வெறுத்து ஒதுக்கறாங்க…ஆனால் ஒரு நோயாளிக்கு தேவை அன்பும் அரவணைப்பும் தான் என்று இந்த இயக்குனர் எவ்வளவு அழகாக கொண்டு போறாரு இல்லே ரிஷி…அந்த பொண்ணு ரொம்ப பாவம் இல்லைடா…” என்று பாவமாகக் கூறி அவன் ஏதாவது பதில் சொல்லுவான் என்று எதிர்ப்பார்த்தாள்.
அவன் எதுவும் கூறவில்லை என்பதால் அவன் தலையில் தட்டிவிட்டு “டேய் எதுவும் பதில் சொல்ல மாட்டியா…?நான் மட்டும் லூசு மாதிரி பேசிட்டு இருக்கேன்…??நீ பதில் சொல்லாமல் உட்கார்ந்து இருக்கே லூசு…?” என்று திட்டிவிட்டு மறுபடியும் அவன் தலையில் இன்னொரு தட்டு தட்டினாள்.
ஐய்யையோ இன்றைக்கு நல்ல பூசை இருக்கு…கிருஷ் அண்ணா இன்றைக்கு ஶ்ரீக்கு நல்லா வேப்பிலை அடிக்க போகிறார் என்று நினைத்து இன்னும் நிலைமை மோசமாவதற்குள் தன் தோழியைக் காப்பாற்ற எண்ணி அவள் கையை கீதா அழுத்திப்பிடிக்கவும் ஶ்ரீ அவன் கையை நறுக்கென கிள்ளி கிருஷ் ஆவென்று கத்துவதற்கும் சரியாக இருந்தது.
அதன்பிறகு தான் ஶ்ரீ குரலின் பேதத்தை உணர்ந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.பார்த்தவள் அப்படியே சிலையென சமைந்தாள்.கீதா தான் தன் தோழியின் நிலையைக் கண்டு அஞ்சி “ஶ்ரீ…ஶ்ரீ…” என்று பல தடவை அழைத்தப்பிறகு தான் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
வந்தவள் கிருஷ் எதுவும் சொல்லிவிடுவனோ என்று பயந்து “சா…சாரி அத்தான்…நான் தெரி…யாமல் ரிஷினு நினைச்சு இப்படி பண்ணி…ட்டேன்…சாரி…அத்தான்” என்று பயத்தில் குரல் நடுங்க கூறினாள்.
கிருஷ் அவளின் மருண்ட விழிகளைப் பார்த்து “ஏய்…!ரிலக்ஸ் நான் உன்னை இப்போ எதுவுமே சொல்லவில்லை…என் மேல் தான் தப்பு…நான் முன்னாடியே நான் ரிஷி இல்லைனு சொல்லியிருக்கணும்… சோ சொல்லாமல் விட்டதற்கு நான் தான் சாரி கேட்கணும் ஶ்ரீ…சாரி…ஆனால்…என்று பாதியில் நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்தான்.அவன் பேச்சில் கொஞ்சம் நிம்மதி அடைந்த முகம் இப்போது மறுபடியும் கலக்கம் கொள்வதை பார்த்தவன்,
குறும்புடன் “ஆனால் பல நாள் நான் திட்டியதை மனதில் வைத்து இப்படி நீ என்னை பழிவாங்கி இருக்கக்கூடாது ஶ்ரீ” என்று கூறி அவன் தலையையும் கையையும் பாவம்போல் தடவினான்.
அதைப்பார்த்து கீதா சத்தமாகச் சிரித்தாள்.கிருஷூம் கூடவே சிரித்தான்.உடனே எல்லாரும் இங்கு திரும்பி பார்ப்பதைப் பார்த்த ஶ்ரீ “ஏய் கீது…மெதுவாக சிரி…எல்லாரும் நம்மை திரும்பி பார்க்கிறார்கள்” என்று தன் தோழியை அடக்கிவிட்டு தனது அத்தானிடம் “சாரி அத்தான்…நான் வேணும்னு அப்படி பண்ணவில்லை அத்தான்…ரொம்ப வலிக்குதா…??” என்று தவிப்புடன் கேட்டாள்.
அவளின் தவிப்பினால் மனதில் ஒர் இதம் பரவ “ஶ்ரீ நான் சும்மா சொன்னேன்…எனக்கு வலிக்கவில்லை…அதனால் நீ கவலைப்படாமல் படத்தைப் பார்” என்று கூறி அவள் தவிப்பைப் போக்கினான்.
அதன்பிறகு தான் ஶ்ரீ நிம்மதி பெருமூச்சு விட்டு படத்தை கவனித்தாள். ஆனால் கீதா இவர்கள் இருவரையும் தான் கவனித்தாள்.அதன்பிறகு கிருஷ் ஶ்ரீயின் பக்கம் கூடத் திரும்பவில்லை.படம் ஒன்றே கண்ணாக அதையே பார்த்து கொண்டு இருந்தான்.ஆனால் தனது தோழி தான் ஒரு வித அலைபுரிதலுடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து “என்னாச்சு ஶ்ரீ” என்றாள்.
அதற்கு ஶ்ரீ “கிருஷ் அத்தான் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது ஒரு மாதிரி இருக்கிறது…இதுக்கு முன்னாடி அத்தான் பக்கத்தில் உட்கார்ந்தது இல்லையா…அதனால் ஒரு மாதிரி இருக்கிறது…வேற ஒண்ணுமில்லை” என்று அவளே கேள்வியும் அவளே பதிலும் தந்தாள்.
அன்று நடந்த அந்த நிகழ்வை இன்று நினைத்து பார்த்து யோசித்து கொண்டு இருந்தாள் கீதா.ரமேஷ் ஶ்ரீயை காதலிக்கிறான்…அவன் கண்களைப் பார்த்தால் அவன் கண்கள் ஶ்ரீயை உண்மையாகக் காதலிப்பதை எடுத்து கூறுகிறது…
அடுத்து கிருஷ்,அன்று சினிமா அரங்கில் மீரா உரசும் போது திட்டியவன்…அதே ஶ்ரீ உரசும் போது திட்டவில்லை…பிறகு கிருஷ் அண்ணா ஶ்ரீயையே பார்த்து கொண்டு இருக்கும் போது அன்று கிருஷ் அண்ணா கண்களில் ஒரு ஒளி தெரிந்தது…அதில் நிச்சயமாக காதல் நிரம்பி வழிந்தது…கொஞ்சம் நேரத்தில் அது பொய்யோ என்று எண்ணும் அளவுக்கு அண்ணா அப்படி நடந்து கொண்டார்.நமக்கு தான் அப்படி தெரிந்ததா…?இல்லை அது தான் உண்மையா…???
அடுத்த இந்த ஶ்ரீ,எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டிக்கிறாள்…தன் பின்னால் சுற்றிய எல்லாரையும் அழைத்து அறிவுரை வழங்கியவள்…ரமேஷை அழைத்து ஏன் அறிவுரை கூறவில்லை…??அதன்பிறகு அன்று தியேட்டரில் ரிஷி என்று நெருங்கி அமர்ந்தவளால்…அது கிருஷ் என்று தெரிந்தப்பிறகு அவரின் பக்கத்தில் கூட உட்கார முடியவில்லையே அது ஏன்…??மனதில் ஒண்ணும் இல்லை என்றால் ஏன் அண்ணா பக்கத்தில் உட்காரும் போது அவளுக்கு அந்த தவிப்பு ஏற்பட்டது…அப்போ இவள் கிருஷ் அண்ணாவை விரும்புகிறாளா…இல்லை இந்த ரமேஷை விரும்பிகிறாளா…??? என்று பல கேள்விகளைத் தன்னையே கேட்டுவிட்டு அதற்கு பதில் தெரியாமல் தலையைப் பிச்சு கொண்டு ஶ்ரீக்கு செல்லில் தொடர்பு கொண்டாள்.
தன் மனதை அறுத்த அத்தனை கேள்விகளையும் ஶ்ரீயிடம் கேட்டாள் கீதா…அவள் அதற்கெல்லாம் சேர்த்து ஒரே வாக்கியத்தில் பதில் அளித்தாள்…அந்த பதிலைக் கேட்ட கீதாவிற்கு ஒரு நிமிடம் பூமியே தன் சுழற்சியை நிறுத்தியதைப் போலானது.அந்த பெருத்த அதிர்ச்சியினால் தனது போனைக் கையில் இருந்து தவறவிட்டதை கூட அறியாமல் சிலையென நின்றிருந்தாள்.